"பள்ளிகூடத்தில் நண்பன் கொடுத்தது. திருப்பதி கயிறுண்ணான்.. எனக்காக வாங்கினதுண்ணான்... கையில கட்டி விட்டான்." கருப்பு கயிறு கதையை சொல்லி முடித்தேன் வேகமா... இதுக்கு ஒரு சிரிப்பு... இப்போ கொஞ்சம் சத்தமா.. வேற யாரு தாத்தாதான்... ஜுன்கிள் புக் ஓடுகிறது டிடியில்... எனக்கு அதை விட்டுவிட கூடாதென்ற ஆர்வம்... எத்தனை படிக்கிற? "மூணாவது முடிச்சிட்டேன்!" இந்த பதிலை சொல்வதில் எனக்கு அப்படி ஒரு சந்தோசம்.
என் கையை எடுத்து தடவி பார்த்தார்.. "இங்க பாரு உன் பையன் கையில கண்ட கயிற கட்டி இருக்கான்.. சாமி கையிராம்.. ரொம்ப இறுக்கமா வேற.. அழுக்கு சேரும் அந்த எடத்துல.. "தாத்தா சொன்னதுக்கு பதில் வரவில்லை.. கேட்டு கொண்டு இருந்தார்கள் அம்மாவும் சித்திகளும்..மறுத்தோ எதிர்த்தோ பேசி இருந்தால் தானே வாழ்நாளில்.... கயிறை தடவிக்கொண்டார்.. மறுபடியும்.. ஒரு விரல் விட்டு பார்த்தார் கயிறுக்கும் என் கைக்கும் இடையில்.. "ஆமா இறுக்கமாதான் இருக்கு.. தண்ணி பட்டா இன்னும் இறுகும்."அவரே முனகி கொண்டார்..
எனக்கு இந்த ஜுன்கிள் புக்கில் வருவது போல் காட்டில் வாழ வேண்டும்.. ச்ச.. மரம் விட்டு மரம் தாவி..எவ்ளோ அழகா கொரங்கு கூட சேர்ந்து... இங்க மச்சியிலே ஓட்டு மேல ஏறுனாலே திட்டு விழுது.. ஒரு மரத்துல ஏற விடுவாங்களா... விட மாட்டாங்க..கொய்யா மரத்துல ஏறி நான் வாங்குன திட்டு எனக்கு தான் தெரியும்..என் கவலை எனக்கு.... அப்போதுதான் நடந்தது அது..தாத்தாவின் சாவிகொத்தில் இருக்கும் கத்தி அழகாய் கயிறை அறுத்தேறிந்தது...
"சாமியாம் சாமி..அழுக்கு செருறதுக்கு ஒரு காரணம் வேற....படிக்கிற பிள்ளைகளே இப்படி இருந்தா.. மத்த ஜனம் எப்படி இருக்கும்..."தாத்தாவின் வார்த்தைகள் இன்னும் கேட்கிறது....இது எங்க வீட்டுல நடந்த கயிறறுப்பு!

No comments:
Post a Comment