அதே தவறு மீண்டும்.. என் மனம் என்னை பார்த்துச் சிரிக்கிறது..மறுபடியும்!!
"அப்பா! இங்கே வாங்களேன்." என்று கத்துகிறேன். முதலில் தம்பி வருகிறான் எப்பொழுதும் போல். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது முற்றிலும் பொய். என் பிரச்சனைகளில் அவன் இல்லாத நேரங்கள் இல்லை நான் வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம்.
பல நாள் கழித்து நான் இன்று வீட்டில் உள்ளதால் அவன் ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகம். கண்ணுக்குத் அவன் தென்படவில்லை என்ற போதிலும் சிலரின் இருப்பினை உணரமுடிகிறது. கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறான் சத்தம் இல்லாமல் சிரிக்கிறான். "அப்பா!" மறுபடியும் என் கூக்குரல். "என்ன ஆச்சு? புதுத்துணிய போடலயா?" என்ற கேள்வியுடன் வந்த அப்பாவுக்கு என்னை கண்டவுடன் புரிந்தது.
"பட்டன கழட்டாம ஏன் தலை வழியா சட்டைய போடற? " இது அப்பா.
அப்பா பட்டனை கழட்டியதும் சட்டை தலைக்குள் நுழைந்தது.
"அவன் என்னைக்கு அப்பா நீங்க சொல்றத கேப்பான். முடிய பாருங்க. நேத்துதான் போனான் முடி வெட்ட." சமயம் பார்த்து உண்மை என்கிற தோனியில் போட்டுக்கொடுப்பதில் இவனை மிஞ்ச ஆள் கிடையாது. எனக்கு பழகிப்போய்விட்டது இவன் சொல்லும் சொல்லுக்கு அப்பா ஆடுவது.
"சரி கிளம்பு சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டுவரலாம். ஸ்வீட்டை எடு" என்று பேச்சை மாற்றுகிறேன்.
சில தவறுகள் சிரிக்கும் படியாய்!
No comments:
Post a Comment