Monday, December 16, 2013

Waiting for the wind

You can give an another try
Its just that I wont cry
Waiting for the wind to arrive

But I know that I cant fly
One day it will take me high
You will see me really fly!

வேலையை உதறிய வேலையில்லாபட்டதாரி

வெட்கம் கெட்டவர்களே உங்களை நம்பி வந்தேன் நானும்
வாட்டி வதக்கினீர் என்னை கேள்வி கணைகளால் அன்று
வெற்றி வாகை சூடிய வேங்கை நான் உங்கள் விழாவில்
வேகம் என்ன விவேகம் என்ன பாராட்டினீர் அன்று
வேலைக்கு அழைத்தீர் வீர மகா புத்திசாலி என்று
வெறுமையாக இருந்து வீழ்வதற்கா அத்தனை விளம்பரம்
விற்பனைக்குதான் நான் அன்றும் இன்றும் என்றும்
வெட்டியாக இருந்து வீண் பொழுதை கழிப்பதற்கு அல்ல
வாங்கி கொள் உன் வேலை வாய்ப்பு கடிதத்தை
நான் வேலையில்லா பட்டதாரி ஆகிறேன் மிக மகிழ்ச்சியாய்!!!
- வேலையை உதறிய வேலையில்லாபட்டதாரி

எப்படி கண்டு பிடிப்பேன் என் காதலியை??

எப்படி கண்டு பிடிப்பேன் என் காதலியை
பார்த்தும் பிடித்து விட்டதாம்
காதலிக்கிறோம் என்கிறார்கள்
கண்டதும் காதல் கண நொடியில்
முடிவெடுத்தோம் என்கிறார்கள்
இவள்தான் உனக்கு என்று உனக்கே தெரியும்
அவளை பார்க்கும் போது என்கிறார்கள்
கண்ணில் மின்னல் வெட்டுமாம்
காலில் ரத்தம் பாயுமாம்
காதில் இனியோசை கேட்குமாம்
இவள்தான் என்று
அடேய் மடையர்களே என் பிரச்சனை அதுவல்ல
கண்ணில்ப்படும் இளம் பெண்ணெல்லாம் அழகாக தெரிந்தால்
எப்படி கண்டு பிடிப்பேன் என் தேவதையை???

அருள்மொழி வர்மா!!! ராஜராஜ சோழா!!!



காட்டை அழித்து களவு செய்து நாட்டை சூறையாடி
மாமக்களை கொன்று சரித்து பட்டினியால் வதக்கி
பிணியால் ஊறவைத்துஅடிபணிய போர் செய்வார்களாம்
இன்று கூட அப்படித்தான் எனக்கு தெரிந்தவரை
சொந்த நாட்டிலிருந்து சோறுடைத்து பாய்மரங்களில்
தானியங்கள் சுமந்து பசி பிணி விரட்டி பாசம் செய்து
நுழையும் போதே வெற்றி முரசு கொட்டப்பட்டு
மக்களால் மலர் மாலை சூடப்பட்டு வியக்கவைக்கும்
விதமாய் போர் நடந்தது இலங்கையில்
ராமன் தோற்றான் உன் முன் போர் முறையில்
உயிரோடிருந்தால் குந்தவை கடிந்து கொண்டிருப்பாள்
சிங்களவன் குலத்தை ஏன் சீர்குலைக்கவில்லை என்று
புத்த விகாரங்களை ஏன் இடித்து நொறுக்கவில்லை என்று
“அருள்மொழி வர்மா!!! ராஜராஜா சோழா!!!”
உன்னிடம் நான் ஒன்று கேட்கிறேன்
“உன் பாதம் பட்ட இடத்தில் ஏன் இப்படி நடக்கிறது??”

பின் குறிப்பு:
குந்தவை – குந்தவை பிராட்டி என வரலாறில் புகழப்படும் ராஜராஜ  சோழனின் தமக்கை.

Sunday, December 15, 2013

சில்லறைகள் சிரிக்கின்றன

கை ஏந்தி நின்றாள் என்முன் நான் கனவான் என்று
கக்கத்திலிருந்து பை எடுத்து பார்க்கிறேன்
என்னிடம் இருப்பதோ மூன்று ரூபாய்
கனத்த நெஞ்சுடன் கருணைகரம் நீட்டுகிறேன்
கலி முத்திபோயிற்று என்பது தெளிவாக தெரிகிறது
அவள் சுருக்குபையில் இருந்து சில்லறைகள்

கெக்கலித்து சிரிக்கின்றபோது!!!!

கிழவனான கணக்கு வாத்தியார்

இருக்கிறாய் என்றால்  ஏன் வரவில்லை
இத்தனை நாளும் “இறைவனாய்”
இன்று மட்டும் ஏன் என் வீட்டுக்கு

எருமை ஏறி ஊர்வலம் வருகிறாய் “ஏமனாய்”!
கூப்பிட்டபோது என்றும் வராத நீ
கணக்கு தீர்க்க வருகிறாயோ இன்று
எவன் கற்றுகொடுத்தான் உனக்கு
இந்த களவாணிதனத்தை
கம்பெடுத்து அடிப்பேன் உன்னை
நீ என் வாசல் தாண்டி உள்ளே வந்தால்!